என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தைப்பூச விழா: பக்தருக்கு மிளகாய் பொடி அபிஷேகம்- ஏராளமான பக்தர்கள் தரிசனம் தைப்பூச விழா: பக்தருக்கு மிளகாய் பொடி அபிஷேகம்- ஏராளமான பக்தர்கள் தரிசனம்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/12/9224471-newproject18.webp)
X
தைப்பூச விழா: பக்தருக்கு மிளகாய் பொடி அபிஷேகம்- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
By
Maalaimalar12 Feb 2025 12:18 PM IST
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- தண்டபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம்.
- மிளகாய் பொடி இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம் நடைபெற்றது.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா நேற்று நடந்தது.
இவ்விழாவை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விழா நடைபெற்று வந்தது. நேற்று காலை தண்டபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம், மகா தீபாரதனையும், காவடி பூஜையும், நடைபெற்றது.
பிற்பகல் 2 மணி அளவில் பாலதண்டாயுதபாணி சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்று பக்தர் ஒருவருக்கு மார்பு மீது மிளகாய் பொடி இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செடல் சுற்றுதல் தீமிதித்தல், தேர் வீதி உலா ஆகியவை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவதானம் பேட்டை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
X