என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுவண்ணாரப்பேட்டையில் மோட்டார் சைக்கிளை எரித்த ரவுடி கைது
- வ.உ.சி. நகர் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பை சேர்ந்தவர் பூபாலன்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு பூபாலனின் உறவினர் ஒருவரது கடையில் பாட்டிலை உடைத்து சசிகுமார் ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.
சென்னை:
புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகர் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பை சேர்ந்தவர் பூபாலன். கண்டெய்னர் லாரி டிரைவர். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்தி வைத்து இருந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரவுடியான சானா என்கிற அப்பு சசிகுமார் என்பவர் அந்த மோட்டார் சைக்கிளை மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்தார்.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பூபாலனின் உறவினர் ஒருவரது கடையில் பாட்டிலை உடைத்து சசிகுமார் ரகளையில் ஈடுபட்டு உள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக பூபாலனின் மோட்டார் சைக்கிளை சசிக்குமார் தீவைத்து எரித்ததாக தெரிகிறது. பெண் விவகாரம் தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.






