என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வசந்த விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
- திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவில் வசந்த விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பூமாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 89-ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு வசந்த பெருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. இன்று வசந்த திருவிழாவில் பால்குட ஊர்வலம் மிகவும் விமரிசையாக நடை பெற்றது.
இதில் திருப்பத்தூர், தென்மாபட்டு, தம்பிபட்டி ஆகிய பகுதி களை சேர்ந்த இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு பால்குடம், பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக சென்றனர். சாம்பான் ஊரணி அருகே உள்ள கோட்டை கருப்பர் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் பூத்தட்டுகளை தலையில் சுமந்து 4 ரோடு, கீழரத வீதி, தேரோடும் வீதிகள் வழியாக கோவில் திருக்குளத்தை சுற்றி பூமாயி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். அதன்பின்பு பக்தர்கள் கொண்டுவந்த பாலால் பூமாயி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து திருமஞ்சனம், தயிர், பஞ்சாமிர்தம் சந்த னம், குங்குமம் உள்ளிட்ட 8 வகையான திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் வெள்ளி அங்கியில், சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதன்பிறகு பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் பூமாயி அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. அந்த பூக்களை பெண்கள் மடி ஏந்தி வாங்கிச்சென்றனர். பால் குட விழாவில் கலந்து கொண்ட பக்தர் களுக்கு பால்குடம், பூ உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. காலை, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெய்ஹிந்த் வர்த்தக சங்க அமைப்பாளர் பாலகிருஷ்ணன், தலைவர் சுரேஷ் ராமன், செயலாளர் சண்முகநாதன், பொருளாளர் ராஜா, உயர்மட்டகுழு உறுப்பினர் சரவணன் மற்றும் உறுப்பி னர்கள் செய்திருந்தனர்.