என் மலர்
உள்ளூர் செய்திகள்
கல்குவாரி முறைகேடு குறித்து புகார் அளித்த சமூக ஆர்வலர் மீது கொலைவெறி தாக்குதல்
- படுகாயமடைந்த ஞானசேகரன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து முருகனை வலைவீசி தேடி வருகிறார்.
வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பெருமாள் நகரை சேர்ந்தவர் முனுசாமி மகன் ஞானசேகரன் (வயது 32) சமூக ஆர்வலர். இவர் அந்த பகுதியில் உள்ள கல்குவாரிகளின் முறைகேடுகள் பற்றி கலெக்டர் மற்றும் ஊடகங்களில் புகார் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பாக ஞானசேகரன் செல்போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராமையன்பட்டி அயோத்தி என்பவரின் கல்குவாரியில் வேலை பார்க்கும் முருகன் என்பவர் இரும்பு கம்பியால் ஞானசேகரனை சரமரியாக தாக்கியதுடன், ஆபாசமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
ஞானசேகரனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, முருகன் தப்பி ஓடி விட்டார். தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ஞானசேகரன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து முருகனை வலைவீசி தேடி வருகிறார்.