search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பசு மாட்டிற்கு வளைகாப்பு விழா- சீர்வரிசைகளுடன் வந்த பொதுமக்கள்
    X

    பசு மாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றதை படத்தில் காணலாம்.

    பசு மாட்டிற்கு வளைகாப்பு விழா- சீர்வரிசைகளுடன் வந்த பொதுமக்கள்

    • கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு யாக கால பூஜையுடன் கோவிலுக்கு சொந்தமான பசு மாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வளைகாப்பிற்காக பொதுமக்கள் பூ, பழம், வளையல்கள், கலவை சாதங்கள் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுக்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப்பட்டு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரியம்மை உடனுறை மேலகங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு யாக கால பூஜையுடன் கோவிலுக்கு சொந்தமான பசு மாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வளைகாப்பிற்காக பொதுமக்கள் பூ, பழம், வளையல்கள், கலவை சாதங்கள் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுக்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    இதனைதொடர்ந்து கோமாதாவிற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி நீராடி மாலை அணிவித்து, காலில் சலங்கை கட்டியும், பசு மாட்டிற்கு வளையல்களை அணிவித்தும் வளைகாப்பு நிகழ்ச்சியை விமர்சையாக நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோமாதாவிற்கு அன்னம் ஊட்டியும் மஞ்சள் பூசியும் வழிபாடு செய்தனர்.

    Next Story
    ×