என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இந்திய விடுதலைக்காகப் போராடிய தனிப்பெரும் தியாகசீலர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
ByMaalaimalar18 Nov 2023 12:03 PM IST
- ஆங்கிலேய அரசை தீரமுடன் எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிய "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனாரின் நினைவுதினம் இன்று.
- வழக்கறிஞர், எழுத்தாளர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல்வாதி, சுதந்திர போராட்ட வீரர் என பல கோணங்களில் நாட்டிற்காக உழைத்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்.
சென்னை:
'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
"மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ" என மகாகவி பாரதி மனம் நொந்து பாடும் அளவுக்குக் கோவைச் சிறையில் கொடுமைக்குள்ளான வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள்.
தன் இளமை, சொத்து, பாரிஸ்டர் பட்டம் என அனைத்தையும் இழந்து வாழ்நாளெல்லாம் இந்திய விடுதலைக்காகப் போராடிய தனிப்பெரும் தியாகசீலராம் கப்பலோட்டிய தமிழரை நன்றிப்பெருக்குடன் நினைவுகூர்வோம்! அவரது பன்முகப்பட்ட வாழ்வையும் பணிகளையும் போற்றுவோம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×