என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும்- எர்ணாவூர் நாராயணன் வலியுறுத்தல்
- போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் உறுதுணையாக இருக்கவேண்டும்.
- போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டு எடுத்து நல்வழிப்படுத்த தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை அறிவித்து வருகின்றன.
சென்னை:
சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று, அனைத்து தரப்பினரும் நமது அலுவலகங்கள், வணிக வளாகங்கள், இல்லங்களிலும் தேசிய கொடியை வருகிற 13 ,14, 15 ஆகிய மூன்று தினங்களில் நாம் அனைவரும் தேசிய கொடியை கட்டாயம் ஏற்ற வேண்டும்.
போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முற்றிலும் ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருள் ஒழிப்பு, மாணவர்கள் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கவும் வலியுறுத்தி வருகிறார். போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் உறுதுணையாக இருக்கவேண்டும். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டு எடுத்து நல்வழிப்படுத்த தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை அறிவித்து வருகின்றன. பொதுமக்கள் ஆகிய நாமும் அதற்கு ஒத்துழைப்பு நல்கி போதை ஒழிப்புக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.