search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை- சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி
    X

    கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை- சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

    • மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன்.
    • எனக்கு கிடைத்த பெருமையாக பார்க்கவில்லை. தமிழினத்திற்கு கிடைத்த பெருமையாக பார்க்கிறேன்.

    திருப்பூர்:

    பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருப்பூரை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து திருப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் , அரசியல் கட்சி நண்பர்கள், தன்னார்வலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் .

    அப்போது சி.பி. ராதாகிருஷ்ணன், அவரது தாயாரிடம் ஆசி பெற்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்திற்கு மீண்டும் ஒரு ஆளுநரை குடியரசு தலைவரும் பிரதமரும் கொடுத்துள்ளனர். இது தமிழினத்தின் மீதும், பாரம்பரியம் மீதும், கலாச்சாரம் மற்றும் தமிழ்மக்கள் மீதும் எத்தகைய அன்பும் பாசமும் வைத்துள்ளார்கள் என்பதற்கு உதாரணமாக உள்ளது.


    பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மக்களின் உயர்வுக்கும் முன்னேற்றத்திற்கும் என்னென்ன வழியில் செயல்பட முடியுமோ அதை மனதில் வைத்து பணியாற்றுவேன் . இது எனக்கு கிடைத்த பெருமையாக பார்க்கவில்லை. தமிழினத்திற்கு கிடைத்த பெருமையாக பார்க்கிறேன்.

    மோடிக்கும் குடியரசு தலைவருக்கும் தமிழ் மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக இதை பார்க்கிறேன. மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன் என்றார்.

    Next Story
    ×