என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலை குறைந்தது- கிலோ ரூ.50-க்கு விற்பனை வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலை குறைந்தது- கிலோ ரூ.50-க்கு விற்பனை](https://media.maalaimalar.com/h-upload/2023/04/23/1870542-beanse.webp)
வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலை குறைந்தது- கிலோ ரூ.50-க்கு விற்பனை
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- கடந்த 2 நாட்களாக பீன்ஸ் வரத்து சற்று அதிகரித்து உள்ளதால் மீண்டும் அதன் விலை குறைய தொடங்கி இருக்கிறது.
- கோயம்பேடு சந்தைக்கு 480 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து குவிந்தன.
போரூர்:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இன்று கோயம்பேடு சந்தைக்கு 480 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து குவிந்தன. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வரத்து குறைவால் ரூ.120 வரை விற்கப்பட்ட பீன்ஸ் விலை குறைந்து உள்ளது.
கடந்த 2 நாட்களாக பீன்ஸ் வரத்து சற்று அதிகரித்து உள்ளதால் மீண்டும் அதன் விலை குறைய தொடங்கி இருக்கிறது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.50-க்கு விற்கப்பட்டது. இதேபோல் வரத்து அதிகரிப்பு காரணமாக முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ,15-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை சற்று மந்தமாகவே நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் (கிலோவில்) வருமாறு:- தக்காளி-ரூ.9, நாசிக் வெங்காயம்-ரூ.14, சின்ன வெங்காயம்-ரூ.50, உருளைக்கிழங்கு-ரூ.17, உஜாலா கத்தரிக்காய்-ரூ.40, வரி கத்தரிக்காய்-ரூ.30, அவரைக்காய்-ரூ.45, வெண்டைக்காய்-ரூ.20, ஊட்டி கேரட்-ரூ.30, பீன்ஸ்-ரூ.50, பீட்ரூட்-ரூ.20, முட்டைகோஸ்-ரூ.6, சவ்சவ்-ரூ.20, நூக்கல்-ரூ.20, முள்ளங்கி-ரூ.17, காலி பிளவர் ஒன்று-ரூ.25, முருங்கைக் காய்-ரூ.15, பீர்க்கங் காய்-ரூ.30,கோவக்காய்-ரூ.6, பன்னீர் பாகற்காய்-ரூ.30, புடலங்காய்-ரூ.15, கொத்தவரங்காய்-ரூ.20.