என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்- வஞ்சிரம் கிலோ ரூ.1100, வவ்வால் மீன் ரூ.800
- வஞ்சிரம், வவ்வால், திருக்கை மீன்கள், ஊடான், வஞ்சிரம், சூறை உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது.
- வஞ்சிரம் கிலோ ரூ.1100-வரை விற்பனை ஆனது. வவ்வால்மீன்-ரூ.800, பாறை ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ராயபுரம்:
புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவை தவிர்ப்பது வழக்கம். சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள்.
புரட்டாசி மாதத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளும் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று காசிமேட்டில் மீன் வாங்க திரளானோர் குவிந்தனர்.
அதிகாலை முதலே வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டதால் கடும் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் போட்டி போட்டு விரும்பிய மீன்களை வாங்கி செல்கின்றனர்.
100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கரை திரும்பியதால் வஞ்சிரம், வவ்வால், திருக்கை மீன்கள், ஊடான், வஞ்சிரம், சூறை, உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.1100-வரை விற்பனை ஆனது. வவ்வால்மீன்-ரூ.800, பாறை ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மீன்விலை வழக்கத்தை விட அதிகம் என்றாலும் பொதுமக்கள் மீன்களை அதிக அளவில் வாங்கிச் சென்றனர். இதனால் மீன்வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறும்போது, புரட்டாசி சனிக்கிழமை முடிந்ததால் மீன்வியாபாரம் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது இந்த வாரம் கடலுக்கு செல்லாமல் இருந்த விசைப்படகுகள் அதிக அளவில் கடலுக்கு சென்று திரும்பின. மீன்களின் வரத்து மற்றும் பெரிய அளவிலான திருக்கை மீன்கள், ஊடான், வஞ்சிரம், சூறை, உள்ளிட்ட மீன்கள் அதிக அளவில் பிடிபட்டுள்ளன.
அசைவ பிரியர்களின் படையெடுப்பால் காசிமேடு மீன் பிடி துறைமுகம் களை கட்டியுள்ளது. சில்லரை வியாபாரிகளும் தங்கள் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வ தற்காக ஏலத்தில் அதிக அளவில் மீன்களை வாங்கி சென்றனர் என்றார்.
காசிமேட்டில் மீன் விலை (கிலோவில்)வருமாறு:-
வஞ்சிரம்- ரூ.1100
வவ்வால்- ரூ.800
பாறை- ரூ.600
சங்கரா- ரூ.400
திருக்கை- ரூ.350
நெத்திலி- ரூ.200
சூறை- ரூ.500
கடம்பா- ரூ.400
இறால்- ரூ.350
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்