search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை- பழமையான மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது
    X

    மரக்காணம் பகுதியில் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின.

    விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை- பழமையான மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது

    • மரக்காணத்தில் பக்கிங்காங் கால்வாயில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு சொந்தமான 2500 ஏக்கர் உப்பளம் உள்ளது.
    • உப்பளத்தில் 500 கூழித்தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் கோடை காலம் முடிந்து பல நாட்கள் ஆனது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தாலும் அவ்வப்போது மழை பெய்த வண்ணம் இருக்கிறது. இதில் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினத்திலிருந்து 2 நாட்கள் காலை நேரத்தில் வெயில் வாட்டி வந்த நிலையில் பொதுமக்கள் வெயிலினால் ஏற்படும் புழுக்கம் மற்றும் அலர்ஜியில் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசி இரவு 11 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. இதனால் வெயிலினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் விடுபட்டு மகிழ்ச்சி அடைந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் மணம்பூண்டியில் 27, சூரப்பட்டு 21, முகயைூர் 20, கெடார் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை அரகண்டநல்லூர், செஞ்சி, திண்டிவனம், அனந்தபுரம், விக்கிரவாண்டி, கோலியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்தது. நேற்று பெய்த மழை மற்றும் பலத்த காற்றால் விழுப்புரம் நகராட்சி வடக்கு ரெயில்வே பகுதியில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு முறிந்து அருகில் இருந்த புத்துமாரி அம்மன்கோவில் மீது விழுந்தது. இதனால் புத்துமாரி அம்மன்கோவில் சேதமானது. அப்போது கோவிலில் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் இல்லை. கோவில் மரம் விழுந்து முழுவதும் சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பொதுபணித்துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடம் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பக்கிங்காங் கால்வாயில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு சொந்தமான 2500 ஏக்கர் உப்பளம் உள்ளது. இந்த உப்பளத்தில் 500 கூழித்தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் ஜனவரி மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை உப்பளத்தில் வேலை தொடர்ந்து நடைபெற்று வருவது வழக்கம்.

    இந்நிலையில் தற்போது மழை பெய்யும் காரணத்தால் ஜனவரி-ஜூலை மாதம் வரை உப்பளத்தில் வேலை பார்ப்பதற்கு ஊழியர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று பெய்த மழையினால் 2500 ஏக்கர் உப்பளம் மழை நீரில் முழ்கியது. இதனால் உப்பளத்தில் மழை நீர் கடல் போல் காட்சியளித்தது. இங்கு வேலை பார்க்கும் உப்பள உற்பத்தி கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு குள்ளானது. இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத நிலையில் நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளர்கள் கோரிக்கை விடுகின்றனர். விழுப்புரத்தில் நேற்று பெய்த மழையினால் பெரும் சேதம் ஏற்பட்டது.

    Next Story
    ×