என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாய் திறக்காத மகளிர் அமைப்புகள்: தனி ஒருவராக துணிச்சலாக போராடி சாதித்த குஷ்பு
- நான் யாருடைய ஆதரவையும் எதிர் பார்ப்பதும் இல்லை. தனிப்பட்ட முறையில் என்னால் போராடி ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு.
- இனி மேல் யாரும் பெண்களை பற்றி எப்படியும் பேசலாம் என்று நினைக்கவே கூடாது.
சென்னை :
தமிழக கவர்னர் ஆர்.என் ரவி, டி.ஜெயக்குமார், குஷ்பு பற்றி அவதூறாக பேசியதாக தி.மு.க. நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைதாகியுள்ளார். அவர் மீது கடுமையான சட்டப்பிரிவுகள் பாய்ந்தன.
இந்த விவகாரத்தில் தனி ஒருவராக நின்று நடிகை குஷ்பு சாதித்து காட்டி இருக்கிறார். தனக்கு எதிரான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் குஷ்புவிடம் இருப்பதை பல்வேறு நிகழ்வுகளில் பார்த்து வருகிறோம்.
பெண்களை பற்றி தவறான கருத்துக்களை யாராவது தெரிவித்தால் பல கட்சிகள், அமைப்புகள் வரிந்துகட்டி குரல் கொடுக்கும். வீதிக்கு வந்து போராடவும் செய்வார்கள்.
ஆனால் குஷ்பு விவகாரத்தில் எந்த ஒரு அமைப்பும், கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை. அதைப்பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் தனி நபராக நின்று போராடுகிறார். இந்த விஷயத்திலும் தனக்காக என்ற எண்ணத்தில் அவர் போராடவில்லை. அனைத்து பெண்களுக்காகவும் தான் குரல் கொடுக்கிறார்.
பெத்த அப்பாவுக்கும், கட்டின புருஷனுக்கும் இந்த உரிமையை கொடுக்காதபோது ரோட்டில் போகும் எவனோ ஒருத்தனுக்கு இந்த உரிமையை கொடுத்துவிட முடியுமா? இந்த மாதிரி ஆண்களை முட்டிக்கு முட்டி தட்டினால்தான் புத்தி வரும் என்றபோது அவரது பேச்சில் அனல் தெறித்தது.
குஷ்புவை சீண்டி பார்க்காதீங்க திருப்பி அடிச்சாதாங்கமாடீங்க. என்னை பற்றி எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு பேசுவா. நாளைக்கு மறந்திடுவா என்று சாதாரணமாக நினைக்காதீங்க. குஷ்பு மன்னிச்சுடுவா... ஆனால் எதையும் மறக்கமாட்டா... அந்த புத்தி எனக்கு கிடையாது.
மாநிலத்தின் முதல்-அமைச்சர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் அவர் என்னை சீண்டிபார்த்தால் அவருக்கே தெரியும் என் பதிலடி எப்படி இருக்கும் என்று. இதை அவருக்கும் எச்சரிக்கையாகவே சொல்கிறேன் என்று குஷ்பு ஆவேசத்தின் உச்சிக்கே சென்றது எல்லோரையும் அதிர வைத்தது.
இந்த நிலையில் தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
இதுபற்றி குஷ்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தரம்கெட்ட அந்த நபரின் பெயரை கூட நான் சொல்ல விரும்பவில்லை. அந்த பெயரை உச்சரிப்பதே அவமானம். அவரை கட்சியில் இருந்து நீக்கியதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி. கவர்னரை தரக்குறைவாக விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் நான் மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்கவில்லை. நானாக புகார் கொடுத்தால் மகளிர் ஆணைய உறுப்பினராக இருப்பதால்தான் நடவடிக்கை எடுப்பதாக சில கட்சிகள் விமர்சிக்கும். தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு தொடுத்துள்ளது. எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு அடிப்போம்.
நான் எனக்காக மட்டும் குரல் கொடுக்கவில்லை. எந்த பெண்களையும் தரக்குறைவாக பேசக்கூடாது. நடத்தக்கூடாது என்று தான் பேசுகிறேன். பெண்களின் காவலர்கள் போல் தங்களை காட்டிக் கொள்ளும் எந்த கட்சியும் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே என்கிறார்கள். நான் பா.ஜனதாவில் இருப்பதால் அப்படி இருக்கலாம்.
நான் யாருடைய ஆதரவையும் எதிர் பார்ப்பதும் இல்லை. தனிப்பட்ட முறையில் என்னால் போராடி ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு. மற்றவர்களுக்கும் இது தெரியும். எனது கருத்துக்காக என் மீது போடப்பட்ட வழக்குகளை தனி ஒருத்தியாகத்தான் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று 5 ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றேன்.
இனி மேல் யாரும் பெண்களை பற்றி எப்படியும் பேசலாம் என்று நினைக்கவே கூடாது. அதற்கேற்ற வகையில் எனது நடவடிக்கை இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்