என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரம் பட்டாசு குடோன் வெடிவிபத்தில் 9 பேர் பலி: என்.ஆர்.தனபாலன் இரங்கல்
- பட்டாசு தொழிற்சாலை மற்றும் குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியளிக்கிறது.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவருக்கும் தலா ரூ. 2 லட்சம் அரசு வழங்க வேண்டும்.
சென்னை :
பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலை மற்றும் குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
காஞ்சிபுரம் பட்டாசு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்துள்ள 3 லட்சம் போதுமானதல்ல, தொழிலாளர்களின் உயிர் இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாதது என்பதை அரசு கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவருக்கும் தலா ரூ. 2 லட்சம் அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.