search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் தடுப்பு பணிகள் தீவிரம்
    X
    அவினாசி சேவூர் பகுதியில் மதுவிலக்கு போலீசார் மாற்று உடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட காட்சி.

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் தடுப்பு பணிகள் தீவிரம்

    • தாராபுரம் மதுவிலக்கு போலீசார் மாவட்ட எல்லை பகுதிகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர்.
    • எங்காவது பதுங்கி இருந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்களா என்று கண்காணித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் தடுப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய் உத்தரவின் பேரில் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவினாசி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில் போலீசார் திருப்பூர்- ஈரோடு எல்லைப்பகுதிகள், சேவூர், ராயர்ப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தாராபுரம் மதுவிலக்கு போலீசார் மாவட்ட எல்லை பகுதிகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர். இதனை தவிர அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வெளிமாநில மது மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா? என்று ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

    திருப்பூர் மாநகரம் முழுவதும் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் போலீசார், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுப்பட்ட பழைய குற்றவாளிகள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். எங்காவது பதுங்கி இருந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்களா என்று கண்காணித்து வருகின்றனர். மேலும் கள்ளச்சாராய புகார்கள் உள்ள வெள்ளகோவில், காங்கேயம், பல்லடம் பகுதிகளில் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×