என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கம்பத்தில் 2-வது மனைவியை கொலை செய்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
- அமுதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
- ஜெயகுமாருக்கும், அமுதாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கம்பம் போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்த கம்பம் மெட்டு காலனி பகுதியை சேர்ந்த அமுதாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் 2 பேரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். அமுதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார். ஜெயகுமாருக்கும், அமுதாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதில் அவர் அமுதாவை தாக்கியதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
பின்னர் அமுதா வழக்கை திரும்ப பெற்றதால் ஜெயக்குமார் மீண்டும் பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் அமுதாவுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் அமுதாவை அடித்து, உதைத்து கழுத்தை நெரித்து கொன்றார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.