என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நளினி வழக்கின் தீர்ப்பில் அட்வகேட் ஜெனரல் கூறாத கருத்துக்கள்- தமிழக அரசு புதிய மனு தாக்கல்
- ராஜீவ்காந்தியை கொலை செய்த குற்றம் மட்டுமல்லாமல், பிற சட்டப்பிரிவுகளின் கீழும் குற்றம் உள்ளதால் அவருக்கு தூக்குத் தண்டனை முதலில் விதிக்கப்பட்டது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் தெரிகிறது.
- அதனால், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை ஜனாதிபதிக்கு தமிழ்நாடு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார்.
சென்னை:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி அதை கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கவர்னர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்தார். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நளினி, கவர்னர் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்து கடந்த 17-ந்தேதி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் தீர்ப்பு அளித்தனர்.
அந்த தீர்ப்பில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்காத கருத்துக்கள் மட்டும் வாதங்களில் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த பகுதியை நீக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் உள்துறை இணை செயலாளர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ராஜீவ்காந்தியை கொலை செய்த குற்றம் மட்டுமல்லாமல், பிற சட்டப்பிரிவுகளின் கீழும் குற்றம் உள்ளதால் அவருக்கு தூக்குத் தண்டனை முதலில் விதிக்கப்பட்டது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் தெரிகிறது. அதனால், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை ஜனாதிபதிக்கு தமிழ்நாடு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். கவர்னரின் இந்த நடவடிக்கை சரியானது என்று அட்வகேட் தன் வாதத்தில் கூறியதாக தீர்ப்பில் உள்ளது. ஆனால் அட்வகேட் ஜெனரல் அப்படி எதுவும் கூறவில்லை.
மேலும், அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து, கவர்னரோ அல்லது ஜனாதிபதியோ கையெழுத்திடவில்லை என்றால், நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று அட்வகேட் ஜெனரல் கூறியதாக தீர்ப்பில் உள்ளது. இந்த கருத்தையும் அட்வகேட் ஜெனரல் கூறவில்லை.
எனவே, நளினி மனு மீதான தீர்ப்பை மாற்றி அமைக்க வேண்டும். அட்வகேட் ஜெனரல் கூறாத இந்த வாதத்தை தீர்ப்பில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்