search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் வரும் காலத்தில் ஒரே வீட்டில் இருந்து இரண்டு முதலமைச்சர் கூட அறிவிக்கப்படலாம்- டிடிவி தினகரன்
    X

    தமிழகத்தில் வரும் காலத்தில் ஒரே வீட்டில் இருந்து இரண்டு முதலமைச்சர் கூட அறிவிக்கப்படலாம்- டிடிவி தினகரன்

    • ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் எல்லாம் நாங்கள் எல்லாம் வாழையடி வாழையாக கட்சிக்காக பல தலைமுறைகளை உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
    • புதிதாக வந்தவர்களுக்கெல்லாம் முக்கிய பதவிகள் எல்லாம் கிடைக்கிறது.

    திருப்பூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மரத்தான் போட்டி நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிடிவி தினகரன் பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம், தொழில் முன்னேறிய பகுதியாக இருந்து வந்தது. தற்போது பல்வேறு பிரச்சனைகளால் சிக்கி தவிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் சரியான முறையில் அணுகி மீண்டும் திருப்பூர் ஒரு சிறந்த தொழில் நகரமாக உருவாவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    உதயநிதி ஸ்டாலின் திமுகவினுடைய எம்எல்ஏ சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அமைச்சராவதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை. அவருடைய தந்தை மு.க.ஸ்டாலின் 89ம் ஆண்டு முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது அவர் ஒன்றும் அவசரக்கதியில் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. அனுபவம் வாய்ந்தவர்கள் முன் வரட்டும் என சொல்லி, அனுபவம் வாய்ந்தவர்கள் தான் அமைச்சராக இருந்தார்கள். புதியவர்களும் வருபவதுஉண்டு. அவர் முதல்வராக இருந்த பொழுது கருணாநிதி, ஸ்டாலின் அவர்களை 96 இல் மேயராக தான் கொண்டு வந்தார். பின்பு 2006 இல் தான் உள்ளாட்சி துறை அமைச்சராக அறிவித்தார். பொறுமையாக தான் கையாண்டார். ஆனால், அவருடைய மகன் முத்துவேல் கருணாநிதியின் மகன் என சொல்லிக் கொண்டிருக்கிற திரு ஸ்டாலின் அவசரக் கதியில் அவசர அவசரமாக அமைச்சராக உதயநிதி ஸ்டாலினை அறிவித்தது ஏனோ என எல்லோர் மனதிலும் அய்யம் ஏற்படுகிறது.

    அவர் அரசியலுக்கு வந்ததும் அவசரக் கதி தான் அவர்களின் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என முன்னர் ஸ்டாலின் தெரிவித்தார். தற்போது சொல்வதற்கு மாறாக செயல்பட்டு வருகிறார். வரும் காலத்தில் ஒரே வீட்டில் இருந்து இரண்டு முதல்வர் கூட அறிவிக்கலாம்.

    2023 நவம்பர், டிசம்பரில் அமமுக தேர்தல் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும்.

    ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் எல்லாம் நாங்கள் எல்லாம் வாழையடி வாழையாக கட்சிக்காக பல தலைமுறைகளை உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், புதிதாக வந்தவர்களுக்கெல்லாம் முக்கிய பதவிகள் எல்லாம் கிடைக்கிறது. அதற்கு காரணம் என்ன அவர்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தி விட்டார். அதேபோல் பல பேருக்கு அந்த குமுறல் உள்ளது. திடீரென வந்தவர்களுக்கெல்லாம் அவர்கள் அமைச்சர் ஆகிறார். அதற்கு என்ன காரணம் திமுகவில் உள்ளவர்களுக்கு எல்லாம் திறமை இல்லையா? நிர்வாக திறமை இல்லையா? வேற ஏதாவது கரெக்டா கரெக்ட் பண்ணி கொடுக்கிறார்களா? கத்திரிக்கா முத்தினால் சந்தைக்கு வந்து தான் ஆக வேண்டும்.

    புரட்சித்தலைவர் என்ன காரணத்துக்காக ஆரம்பித்தாரோ? அம்மா அவர்கள் அதை என்ன காரணத்திற்காக கட்டி காத்தார்களோ, அது எல்லாம் இன்றைக்கு மாற்றி மாற்று பாதை அமைப்போம் என்பது போல அந்த பாதையில் இருந்து விலகி, ஒரு கடல் போன்ற இயக்கத்தை குட்டை மாதிரி உருவாக்குகிறார்கள். ஒரு வட்டார கட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் நாலைந்து பேர் மட்டும் உட்கார்ந்து கொண்டு கட்சியை நடத்துவதை தான் அவர்கள் விரும்புகிறார்கள். அதிமுக வட்டாரக் கட்சி ஆகிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு ஆவர் கூறினார்.

    Next Story
    ×