என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
9 பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.866 கோடியில் செயல்படுத்தப்படுகிறது
- வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட காரம்பாக்கம் பகுதியில் நடந்து வரும் பணியின் மூலம் 9,078 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
- ராமாபுரம், நெற்குன்றம் பகுதியிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் பணிகளை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
அதன் அடிப்படையில் ரூ.866.34 கோடி மதிப்பீட்டில் மணலி, சின்னசேக்காடு, காரம்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம், ராமாபுரம், மடிப்பாக்கம், நெற்குன்றம், பள்ளிக்கரணை பகுதிகள் மற்றும் அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட மதனங்குப்பம், ஒரகடம், வெங்கடாபுரம், கள்ளிகுப்பம் பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மணலி மண்டலத்திற்கு உட்பட்ட சி.பி.சி.எல். நகர், சின்னமாத்தூர் சாலை, திருவேங்கடம் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.60.89 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது.
இதன்மூலம் 7,182 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும். இதேபோல சின்னசேக்காடு பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடக்கிறது.
வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட காரம்பாக்கம் பகுதியில் நடந்து வரும் பணியின் மூலம் 9,078 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும். ராமாபுரம், நெற்குன்றம் பகுதியிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது.
ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதியில் நடந்து வரும் பணியின் மூலம் 10,900 வீட்டு கழிவு நீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் ரூ.249 கோடியிலும், பள்ளிக்கரணையில் ரூ.92 கோடி செலவிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் 14 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும்.
விரிவாக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 59 ஆயிரத்து 446 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும். இதன்மூலம் 6 லட்சத்து 2 ஆயிரத்து 799 பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்