search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் புகாரால் குப்பை வண்டியில் சென்று ஆய்வு செய்த பா.ஜ.க. அமைச்சர்
    X

    பொதுமக்கள் புகாரால் குப்பை வண்டியில் சென்று ஆய்வு செய்த பா.ஜ.க. அமைச்சர்

    • குப்பையுடன் கழிவுநீர் வெளியேறி நோய் பரவும் அபாயம்.
    • கழிவுநீரை ஊருக்குள் நுழையாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பெஞ்ஜல் புயல் காரணமாக கன மழை பெய்தது. இதனால் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை சூழ்ந்தது.

    இந்த நிலையில் புதுச்சேரி ஊசுடு தொகுதிக்குட்பட்ட குரும்பாபேட் குப்பை கிடங்கில் இருந்து குப்பையுடன் கழிவுநீர் வெளியேறி கோபாலன்கடை பகுதியில் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான சாய் ஜெ சரவணன்குமாரிடம் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் கோபாலன் கடை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதி மக்கள் குப்பைக் கிடங்கில் இருந்து வரும் கழிவுநீரை ஊருக்குள் நுழையாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் அந்த வழியாக சென்ற குப்பை வண்டியில் ஏறி குரும்பாபேட் குப்பை கிடங்கிற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்து கழிவுகள் வெளியேறி வாய்க்கால் வழியாக ஊருக்குள் புகுந்தது தெரியவந்தது.

    இதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தனியார் நிறுவனத்திடம் அறிவுறுத்தினார்.

    இதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து மீண்டும் குப்பை வண்டியில் ஏறி புறப்பட்டு சென்றார். அமைச்சர் குப்பை வண்டியில் ஏறி ஆய்வு செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×