என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்செந்தூர் கடல் 80 அடி உள்வாங்கியது
ByMaalaimalar30 Nov 2024 7:46 PM IST
- இன்று அமாவாசை தினம் என்பதால் கடல் சுமார் 80 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்படுகிறது.
- பக்தர்கள் பாறை மீது ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. இந்த கோவில் கடலானது அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் உள்வாங்குவதும் சில நேரங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இன்று அமாவாசை தினம் என்பதால் கடல் சுமார் 80 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்படுகிறது.
இதனால் கடல் அலைகளின்றி குளம் போல் காட்சியளித்து பச்சை நிற பாசிப்படிந்த பாறையில் வெளியே தெரிகிறது. பக்தர்கள் பாறை மீது ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
Next Story
×
X