என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
10-ம் வகுப்பு தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் 93.93 சதவீதம் பேர் தேர்ச்சி
- 10-ம் வகுப்பு தேர்வில் 30 ஆயிரத்து 152 பேர் எழுதினர்.
- 10-ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 28 ஆயிரத்து 323 பேர் தேர்ச்சிப் பெற்றனர்.
திருப்பூர் :
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20ந் தேதி வரை நடந்தது. இத்தேர்வை திருப்பூர் மாவட்டத்தில் 312 பள்ளிகளைச் சேர்ந்த 15 ஆயிரத்து 67 மாணவர்கள், 15 ஆயிரத்து 85 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 152 பேர் எழுதினர். இதன் முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 30 ஆயிரத்து 152 மாணவ, மாணவிகளில் 13 ஆயிரத்து 785 மாணவர்கள், 14 ஆயிரத்து 538 மாணவிகள் என மொத்தம் 28 ஆயிரத்து 323 பேர் தேர்ச்சிப் பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.93 ஆகும். இது கடந்த ஆண்டை விட 5.47 சதவீதம் அதிகம். தேர்வு எழுதிய மாணவர்களில் 91.49 சதவீதம் பேரும், மாணவிகளில் 96.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் கடந்த ஆண்டு 29வது இடம் பிடித்திருந்த நிலையில் தற்போது 18 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை திருப்பூர் மாவட்டம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் திருப்பூர் மாவட்டத்தில் 47 அரசு பள்ளிகள்,1 அரசு உதவி பெறும் பள்ளி, 104 தனியார் பள்ளிகள்,10 சுயநிதி பள்ளி என மொத்தம் 162 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.