search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் - உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தல்
    X

    உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து.

    கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் - உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தல்

    • தென்னை விவசாயிகளுக்கு பயனளிக்கும் குறைந்த விலையில் ஏழைகளுக்கு கிடைக்கும் கள் விற்பனையை அரசு அனுமதிக்க வேண்டும்.
    • உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காத, ஏழைகளின் பட்ஜெட்டுக்குள் அடங்கும் கள் விற்பனையை அரசு அனுமதிக்க வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து செய்தியாளரிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மதுப்பழக்க த்திற்கு ஒட்டுமொத்த சமுதா யமே அடிமையாகியுள்ளது. முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஏன் பள்ளி மாணவ, மாணவியர் கூட மதுவிற்கு அடிமையாகிய மோசமான சூழ்நிலையில் உள்ளது. ஏகபோக மது விற்பனையால் சுமார் ரூ.50 விற்க வேண்டிய மதுபானப்பாட்டில் ரூ.150 க்கு விற்கப்படுகிறது. இதனால் ஏழை கூலித் தொழிலாளர்கள், மீனவர்கள், போன்ற உடல் உழைப்பாளிகள், அதிக விலை கொடுத்து மதுபானம் வாங்க முடியாமல், போதை க்காக கள்ளச்சாராயம், விஷ சாராயம் போன்றவற்றை நாடி செல்கின்றனர்.

    இதனால் மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலி போன்ற சம்பவங்கள் ஏற்படுகிறது. மேலும் மதுபானங்கள் குடிப்பதால் உடல்நல கேடு மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றது. இதனைத் தவிர்க்க உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத, ஏழைகளின் பட்ஜெட்டுக்குள் அடங்கும் கள் விற்பனையை அரசு அனுமதிக்க வேண்டும்.

    இதனால் நஷ்டத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும். மக்கள் நலன், இளைஞர்களின் எதிர்காலம், சமுதாயத்தின் மீது அக்கறை உள்ள அரசாக இருந்தால் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். கள் அருந்துவதின் மூலம் உடலுக்கு தீங்கு இல்லை என்பது ஏற்கனவே நிரூபிக்கப்ப ட்டுள்ளது. உலகில் வேறு எங்கும் கள்ளிற்கு தடை இல்லை, மற்றதற்கெல்லாம் முன்னோடி அரசு என்று சொல்கின்றவர்கள் இதற்கும் முன்னோடியாக இருக்கலாமே.

    எனவே தென்னை விவசா யிகளுக்கு பயனளிக்கும் குறைந்த விலையில் ஏழைகளுக்கு கிடைக்கும் கள் விற்பனையை அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பேட்டியின் போது மாநில செயலாளர் சின்னக்காளி பாளையம் ஈஸ்வரன்,மாநில பொருளாளர் பாலசுப்பி ரமணி, ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×