search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லிப்ட் பராமரிப்பு பணிகள் செய்வதற்காக தி.நகர் ஆகாய நடைமேம்பாலம் 13, 14-ந்தேதிகளில் மூடப்படுகிறது
    X

    லிப்ட் பராமரிப்பு பணிகள் செய்வதற்காக தி.நகர் ஆகாய நடைமேம்பாலம் 13, 14-ந்தேதிகளில் மூடப்படுகிறது

    • பொதுமக்கள் வசதிக்காக பாலத்தில் எஸ்கலேட்டர் வசதி, லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
    • பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு வருபவர்கள் மட்டுமே இந்த பாதையை பயன்படுத்துகிறார்கள்.

    சென்னை:

    தியாகராய நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் பஸ் நிலையம் வரை ரூ.28.5 கோடி செலவில் பிரமாண்ட ஆகாய நடை மேம்பாலம் கட்டப்பட்டது. இதை கடந்த மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பொதுமக்கள் வசதிக்காக பாலத்தில் எஸ்கலேட்டர் வசதி, லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த பாலத்தில் உள்ள எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதையொட்டி நகரும் படிக்கட்டுகள் வருகிற 13-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் 14-ந்தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மூடப்பட்டிருக்கும்.

    14-ந்தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மார்க்கெட் சாலை ரெயில் நிலைய லிப்டும் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும்.

    பணி நடைபெறும் நேரத்தில் எஸ்கலேட்டர்கள் மூடப்பட்டிருப்பின் லிப்ட் மற்றும் படிக்கட்டுகளையும், லிப்ட் மூடப்பட்டிருப்பின் எஸ்கலேட்டர்களையும் பயன்படுத்தி கொள்ள மாநகராட்சி சார்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேம்பாலம் திறக்கப்பட்டு இரண்டு, மூன்று முறை எஸ்கலேட்டரில் பழுது ஏற்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. பின்பு கோளாறு சரி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

    திறக்கப்பட்ட சில வாரங்கள் ஆர்வமிகுதியால் அதிகளவு பொதுமக்கள் பாலத்தை பயன்படுத்தினார்கள்.

    தி.நகரை பொறுத்தவரை ரங்கநாதன் தெருவுக்குதான் பொருட்கள் வாங்க அதிக அளவில் மக்கள் வருகிறார்கள். அவர்கள் ரெயில் நிலையத்துக்கோ அல்லது பஸ் நிலையத்துக்கோ செல்ல ஆகாய நடை மேம்பாலம் தேவைப்படுவதில்லை.

    மேலும் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இறங்கி பஸ் நிலைய பகுதிக்கு செல்பவர்களும் குறைவு. ஏனெனில் அங்கு பெரிய அளவில் வணிக நிறுவனங்கள் இல்லை.

    பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு வருபவர்கள் மட்டுமே இந்த பாதையை பயன்படுத்துகிறார்கள்.

    அதே போல் தெற்கு உஸ்மான் ரோட்டில் உள்ள கடைகளுக்கு செல்பவர்களும், பொருட்கள் வாங்கி விட்டு திரும்புபவர்களும் பஸ் நிலையத்துக்கோ அல்லது ரெயில் நிலையத்துக்கோ செல்வதாக இருந்தாலும் ஆகாய நடை மேம்பாலத்தை விரும்புவதில்லை.

    இதனால்தான் கூட்டம் குறைகிறது. பயணிகள் நெரிசலில் சிக்கி திண்டாடுவதை தவிர்க்கவே இந்த நடை மேம்பாலம் கட்டப்பட்டது. எனவே பொதுமக்கள் ஆகாய நடை மேம்பாலத்தை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.

    Next Story
    ×