search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அடுத்த மாதம் பதவி ஏற்பார்?
    X

    உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அடுத்த மாதம் பதவி ஏற்பார்?

    • அமைச்சரவை மாற்றம் கண்டிப்பாக இருக்கும்.
    • செந்தில்பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் இருக்கும்.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் ஆவது எப்போது என்ற எதிர்பார்ப்பு தி.மு.க.வினரிடைய மீண்டும் ஏற்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் அமெரிக்கா செல்வதற்கு முன்பே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் ஆகி விடுவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அதற்கான சூழல் உருவாகவில்லை.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று திரும்பிய பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் ஆகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதும் நடைபெறவில்லை.

    இது சம்பந்தமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினி டம் முதலில் நிருபர்கள் கேட்கும் போது கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால் பழுக்கவில்லை என்று தெரிவித்தார்.

    அதன் பிறகு மாற்றம் ஒன்றே மாறாதது. வெய்ட் அண்ட் சி என்று தெரிவித்தார். அது மட்டுமின்றி அமைச்சர் துரைமுருகன்-ரஜினி இடையே ஏற்பட்ட வார்த்தை போர் விவகாரத்தை நகைச்சுவையாக பார்க்க வேண்டும் பகைச் சுவையாக பார்க்க கூடாது என்று தெரிவித்தார்.

    அமெரிக்கா சென்று திரும்பிய பிறகு அமைச்ச ரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலின் பதில் கூறும்போது 'சொன்னதை தான் செய்வோம். செய்வ தைத்தான் சொல்வோம்" தி.மு.க. பவள விழா நடை பெற இருக்கும் நிலையில் நீங்கள் எதிர் பார்த்தது நடக்கும் என்றார்.

    அதன் பிறகு 10 நாட்களாகி விட்ட நிலையில் இன்னும் அதற்கான அறிவிப்பு வந்தபாடில்லை. இடை இடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'இந்த தேதியில் துணை முதல்வராகி விடுவார்' என்று தகவல்கள் கசிய விடப்பட்டன.

    இதுபற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளிக்கும் போது, எனக்கு தெரியாது. அது முதல்-அமைச்சரின் முடிவுக்கு உட்பட்டது என்று நழுவிக் கொண்டார்.


    இந்த நிலையில் நேற்று கொளத்தூர் சென்றிருந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அமைச்சரவை மாற்றம் குறித்தும் உதயநிதி துணை முதல்-அமைச்சர் ஆவது பற்றியும் கேள்வி கேட்டனர்.

    அப்போதும் பிடி கொடுக்காமல் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று சொல்லி விட்டார்.

    இதனால் அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    பொதுவாக புரட்டாசி மாதத்தில் நல்ல காரியம் செய்யாமல் பலர் தள்ளிப் போடுவது உண்டு. அந்த வகையில் இந்த மாதம் அமைச்சரவை மாற்றம் நிகழ வாய்ப்பில்லை என்று பேசப்படுகிறது.

    ஆனால் அதே சமயத்தில் அடுத்த மாதம் 2-ந்தேதி அமாவாசை வருவதால் (புரட்டாசி 16) அதன் பிறகு வளர்பிறை நாட்களில் நல்ல நிகழ்ச்சியை தொடங்க வாய்ப்புள்ளதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

    எனவே அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் அடுத்த மாதம் துணை முதல்-அமைச்சராவது உறுதி. அமைச்சரவை மாற்றம் கண்டிப்பாக இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் பேசுகின்றனர்.


    சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அடுத்த மாதம் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று உறுதிபட பலர் தெரிவிக்கின்றனர்.

    செந்தில்பாலாஜி ஜெயிலில் இருந்து எப்போது ஜாமீனில் வெளியில் வந்தாலும் அவருக்கு அமைச்சரவையில் இடம் இருக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×