search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடக சட்டசபையில் கடும் அமளி - பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சஸ்பெண்ட்
    X

    கர்நாடக சட்டசபையில் கடும் அமளி - பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சஸ்பெண்ட்

    • சட்டசபையில் மாநில அரசுக்கு எதிராக பாஜக எம் எல்.ஏக்கள் முழக்கமிட்டனர்.
    • துணை சபாநாயகர் மீது காகிதங்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் இன்று அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.

    பெங்களூருவில் 2 நாட்களாக நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், தலைவர்களை வரவேற்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஈடுபடுத்தியதற்கு எதிராக அவர்கள் அவையில் கூச்சல் எழுப்பினர்.

    சபாநாயகர் காதர் மதிய உணவுக்கு அவையை ஒத்திவைக்காமல் பட்ஜெட் விவாதத்தில் ஈடுபட முடிவு செய்து, தொடர்ந்து அவையை நடத்தும்படி துணை சபாநாயகர் ருத்ரப்பா லாமனியிடம் கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள், சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். துணை சபாநாயகர் மீது காகிதங்களை வீசி ரகளையில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    Next Story
    ×