search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும்- காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை
    X

    காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும்- காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை

    • காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96வது கூட்டம் நடைபெற்றது.
    • கர்நாடக அரசுக்கு, காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

    தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    காவிரியில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி 95 டி.எம்.சி நிலுவை நீரை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    இதையடுத்து மே மாதத்திற்கு தர வேண்டிய 25 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு, ஒழுங்காற்று குழு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், இன்று காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு, காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

    அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறக்கக் கூடாது என்று கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×