search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கட்டிமுடிக்கப்பட்ட பாலம்
    X

    மும்பை- அகமதாபாத் புல்லெட் ரெயிலுக்கான 280மீ பாலம் கட்டும் பணி நிறைவு: போட்டோவை பகிர்ந்த அரசு

    • தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள வத்ராக் ஆற்றுப் பாலம் ஆனந்த் மற்றும் அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையத்திற்கு இடையில் உள்ளது.
    • இரண்டு நிலையங்களுக்கு இடையே முடிக்கப்பட்ட மற்றொரு ஆற்றுப் பாலம் மோஹர் நதி ஆகும்.

    குஜராத்தில் மும்பை- அகமதாபாத் அதிவேக ரெயில் பாதைக்கான (MAHSR) பாலம் கேடா மாவட்டத்தில் உள்ள வத்ராக் ஆற்றின் மீது கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று ரெயில்வே அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும் "ஆனந்த் மற்றும் அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையங்களை இணைக்கும் மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்திற்காக 280 மீட்டர் நீளமுள்ள வத்ராக் ஆற்றுப் பாலம் தற்போது நிறைவடைந்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளது.

    ரெயில்வே அமைச்சக திட்டத்தில் மொத்தம் 24 ஆற்றுப் பாலங்கள் உள்ளன. குஜராத்தில் 20 மற்றும் மகாராஷ்டிராவில் 4 உள்ளன. தற்போது குஜராத்தில் உள்ள 20 பாலங்களில் 10 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

    "இந்நிலையில் தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள வத்ராக் ஆற்றுப் பாலம் ஆனந்த் மற்றும் அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையத்திற்கு இடையில் உள்ளது. இரண்டு நிலையங்களுக்கு இடையே முடிக்கப்பட்ட மற்றொரு ஆற்றுப் பாலம் மோஹர் நதி" ஆகும்.

    "இந்த நதி ராஜஸ்தானின் துங்கர்பூர் மலைப்பகுதியில் உருவாகி குஜராத்தில் மேகராஜ் தாலுகாவின் மொய்டி கிராமத்திற்கு அருகில் நுழைகிறது. வத்ராக் ஆறு ஆனந்த் புல்லட் ரெயில் நிலையத்திலிருந்து 25 கி.மீ தொலைவிலும், அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ தொலைவிலும் உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×