என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
4 மாநில சட்டசபை தேர்தல் அட்டவணை இன்று வெளியாகிறது
- அதிகாரிகளுக்கு தேர்தல் பணி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
புதுடெல்லி:
மராட்டிய மாநில சட்ட சபையின் 5 ஆண்டு பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 26-ந்தேதி நிறைவு பெற உள்ளது. அதுபோல அரியானா மாநில சட்டசபை யின் 5 ஆண்டு கால பதவி காலம் நவம்பர் 3-ந்தேதி நிறைவு பெறுகிறது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 5-ந்தேதி முடிய உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மராட்டியம், அரியானா, ஜார்க்கண்ட், காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களிலும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் முதல் செய்ய தொடங்கியது.
இதனால் இந்த 4 மாநிலங்களிலும் அரசியல் கட்சி தலைவர்களும், அதிகாரிகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். முதல் கட்டமாக இந்த 4 மாநி லங்களிலும் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் அரசு உயர் அதிகாரிகளை மாற்றம் செய்யும் பணி நடந்தது.
இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் 4 மாநிலங்களிலும் அரசியல் சூழ்நிலையை ஆய்வு செய்தது. அதோடு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை தீவிரப்படுத்தியது. அடுத்த கட்டமாக அதிகாரிகளுக்கு தேர்தல் பணி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஓட்டுப்பதிவை எப்போது நடத்தலாம் என்பதற்கான ஆலோசனை கூட்டங்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. இதற்காக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் 4 மாநிலங்களுக்கும் சென்று வந்தனர்.
குறிப்பாக காஷ்மீரில் பாதுகாபபு ஏற்பாடுகள் பற்றி கடந்த சில தினங்களாக தீவிர ஆய்வு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றன.
இதையடுத்து 4 மாநில சட்டசபை தேர்தல் தேதி அட்டவணையை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. இதனால் இந்த 4 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
இதையடுத்து 4 மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வை நடத்த தொடங்கி உள்ளன.
இந்த 4 மாநிலங்களில் அரியானாவில் பா.ஜ.க. ஆட்சி உள்ளது. மராட்டி யத்தில் பா.ஜ.க.-சிவசேனா (ஷிண்டே அணி) கூட்டணி ஆட்சி உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உத்தவ் தாக்கரே காங்கிரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு காங்கிரசும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.
காஷ்மீரில் யூனியன் பிரதேச கவர்னர் மூலம் ஆட்சி நடந்து வருகிறது. இந்த 4 மாநிலங்களில் அரியானாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் மிக மிக தீவிரமாக உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் இப்போதே களை கட்ட தொடங்கி உள்ளது. அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க போகிறேன் என்று காங்கிரஸ் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்