search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் 24 விரல்களோடு பிறந்த குழந்தை- தெய்வமாக வழிபட்டு செல்லும் மக்கள்
    X

    தெலுங்கானாவில் 24 விரல்களோடு பிறந்த குழந்தை- தெய்வமாக வழிபட்டு செல்லும் மக்கள்

    • கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்கள் இருந்துள்ளது.
    • குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பொதுவாக எல்லோருக்கும் 2 கைகளிலும் 10 விரல்கள், 2 கால்களிலும் 10 விரல்கள் என 20 விரல்கள் தான் இருக்கும். அரிதாக 6 விரல்களோடு பிறக்கும் குழந்தைகளை சில நேரங்களில் காண முடியும். அப்படி 6 விரல்களோடு பிறக்கும் குழந்தைகள் அரிது. ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் 24 விரல்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அங்குள்ள நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ராவளி. கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், கோரட்லா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சிறிது நேரத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்கள் இருந்துள்ளது. இது அரிதிலும் அரிது என்று டாக்டர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் அந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்த தகவல் அப்பகுதியில் பரவியதும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் அந்த குழந்தையை தெய்வத்தின் அவதாரம் என்று கூறி வழிபட்டு செல்வதோடு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 24 விரல்களுடன் பிறந்த அந்த குழந்தையின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×