search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மச மசன்னு நிக்காதீங்க.. ரெயிலில் சீட் பிடிக்க பயணிகளை அலேக்காக தூக்கி ஜன்னலில் நுழைத்த கூலி - வீடியோ
    X

    மச மசன்னு நிக்காதீங்க.. ரெயிலில் சீட் பிடிக்க பயணிகளை அலேக்காக தூக்கி ஜன்னலில் நுழைத்த கூலி - வீடியோ

    • இளைஞர், இளம்பெண் என எமர்ஜென்சி ஜன்னல் வழியாக அவர் ஏற்றிவிடுட்டு அவர்களின் லக்கேஜ்களையும் உள்ளே போடுகிறார்.
    • இந்த வீடியோ 2.5 மில்லியன் பார்வைகளை கடந்து கமெண்ட் செக்ஷனே களேபரமாக காணப்படுகிறது.

    மக்கள் வாழும் சமூகம், உயர் வகுப்பு, நடுத்த மற்றும் கீழ் வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளதுபோல் ரெயில்களும் பணம் உள்ளவர் அல்லாதவர்களுக்கு என இரண்டு முகங்களை கொண்டு செயல்படுகிறது. அதிலும் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அது கண்கூடாக வெளிப்படுகிறது.

    ஏசியுடன் மெத்தையில் படுத்துத் தூங்கி கண் விழிக்கும்போது சேர வேண்டிய இடம் வந்ததும் இறங்கி செல்வது ஒரு முகம் என்றால் அடித்து பிடித்து உள்ளே ஏறி, இடம் கிடைக்காமல் லக்கேஜ் வைக்கும் கம்பிகளிலும், கதவில் தொத்தியபடியும், பயோ டாய்லட் பாத்ரூமுக்கு உள்ளேயும் என கூட்டத்தோடு கூட்டமாக புதைந்துக்கொண்டு எப்படியாவது ஊர் போய் சேர்ந்தால் போதும் என்ற வெகு மக்கள் பயணிக்கும் முன்பதிவில்லா UNRESERVED பெட்டிகள் மற்றோரு முகமாகும்.

    இதற்கு மத்தியில் சமீப காலமாக வந்தே பாரத், ஏசி பெட்டிகள் அதிகரிப்பு என குறிப்பிட்டவர்களின் மீது மற்றும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசியல் ரீதியிலான விமர்சனம் எழுந்துள்ளது. ரெயிலில் கதவு வழியாக ஏற வழியில்லாமல் எமர்ஜென்சி ஜென்னல் வழியாக ஏறும் யுக்தி முன்பதிவில்லா பெட்டிகளில் சில துடுக்குத்தனமான நபர்களால் கையாளப்படும் ஒன்றாகும்.

    அந்த யுக்தியை ரெயில் நிலையத்தில் லக்கேஜ் தூக்கும் போர்ட்டர் கூலி ஊழியர் ஒருவர் பயன்படுத்தி லக்கேஜ்களை தூக்குவதுபோல் முன்பதிவில்லா பெட்டியில் பயணிகளை அலேக்காக உள்ளே ஏற்றிவிடும் வீடியோ இணையவாசிகள் இடையே ஹிட் அடித்து வருகிறது.

    சிகப்பு யூனிபார்முடன் இளைஞர், இளம்பெண் என எமர்ஜென்சி ஜன்னல் வழியாக அவர் ஏற்றிவிடுட்டு அவர்களின் லக்கேஜ்களையும் உள்ளே போடுவது வீடியோவில் பதிவாகி உள்ளது. எக்ஸ் தளத்தில் இந்த வீடியோ 2.5 மில்லியன் பார்வைகளை கடந்து கமெண்ட் செக்ஷனே களேபரமாக காணப்படுகிறது.

    பிரபல பாலிவுட் படம் கூலி நம்பர் 1 படத்துடன் ஒப்பிட்டு இணையவாசிகள் தங்கள் கமெண்ட்களை அள்ளி இறைத்து வருகின்றனர். இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் தினம் தினம் ரெயில் நிலையங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

    Next Story
    ×