search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நடிகர் சையித் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
    X

    நடிகர் சையித் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

    • உடல்நடக்குறைவு காரணமாக நடிகர் சையித் அலிகான் மருத்துவமனையில் அனுமதி.
    • நடிகர் சையித் அலிகானுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாலிவுட் உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சையித் அலிகான். இவர் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் உடல்நடக்குறைவு காரணமாக நடிகர் சையித் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையின் அதிகாரபூர்வ அறிக்கைக்கு பிறகே, சையித் அலிகானின் உடல்நிலை குறித்து விவரம் தெரியவரும்.

    ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து, பான் இந்தியா படமான தேவராவில் இவர் நடித்துள்ளார். அனிரூத் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது குறிப்பிடதக்கது.

    Next Story
    ×