என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கல்லூரி மாணவிகள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்திய 3 பேர் கைது
- விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மாணவிகள் கழிவறையில் வேறு கேமரா பொருத்தி இருக்கிறார்களோ என்பதால் கழிவறைக்கு செல்ல பயமாக உள்ளதாக தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டினம் மண்டலம், குட்ல வல்லேருவில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆந்திர மந்திரி கொள்ளு ரவீந்திரன், கலெக்டர் பாலாஜி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கங்காதரராவ் ஆகியோர் கல்லூரிக்கு சென்று மாணவிகளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
கல்லூரி மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக ரகசிய வீடியோ கேமரா பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரகசிய கேமரா பொருத்தியதாக பிரகாசம் மாவட்டம், புல்லல செருவு, அடுத்த கனிகரியை சேர்ந்த பி.டெக் இறுதி ஆண்டு மாணவரும் அவருக்கு உதவி செய்ததாக 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது அதில் 300-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றபோது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் நீங்களா கேமராக்களை பொருத்தினீர்கள் என கிண்டல் அடித்து கோஷமிட்டனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கழிவறையில் வேறு கேமரா பொருத்தி இருக்கிறார்களோ என்பதால் கழிவறைக்கு செல்ல பயமாக உள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் மாணவிகளின் பெற்றோர்களுடன் கல்லூரி முழுவதும் அதே நவீன கேமராக்களை கொண்டு பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் எந்த கேமராக்களும் பொருத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு நிம்மதி பெருமூச்சுடன் விடுதிக்கு சென்றனர்.