என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![அருணாசலபிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் பலி- 5 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு அருணாசலபிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் பலி- 5 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/04/02/1859270-3.webp)
அருணாசலபிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் பலி- 5 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- ராணுவ வீரரான தாகலே இடிபாடுகளில் சிக்கி கொண்டார்.
- அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கவுகாத்தி:
அருணாசலபிரதேசத்தின் தவாங் பகுதியில் மராட்டியம் மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவவீரரான தாகலே உள்ளிட்ட குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரரான தாகலே இடிபாடுகளில் சிக்கி கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து அங்கு சிறப்பு உபகரணங்களுடன் மீட்பு குழுவினர் விரைந்து சென்று ராணுவவீரர் தாகலேவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்புகுழுவினரின் தீவிர போராட்டத்தின் காரணமாக 5 நாட்களுக்கு பிறகு தாகலே சடலமாக மீட்கப்பட்டார். உடலை பிரேத பரிசோதனைக்காக தவாங்கில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலியான ராணுவவீரர் தாகலேவுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.