search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அருணாச்சலப் பிரதேசம் - சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.. 10 இடங்களில் பாஜக போட்டியின்றி வெற்றி
    X

    அருணாச்சலப் பிரதேசம் - சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.. 10 இடங்களில் பாஜக போட்டியின்றி வெற்றி

    • அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • மொத்தம் உள்ள 60 இல் 10 தொகுதிகளில் ஆளும் கட்சியான பாஜக போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளது.

    இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு 6 கட்டங்களில் முறையே ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 ஆகிய தேதிகளில் 6 கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு நேற்று (ஜூன் 1) கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதற்கிடையே ஆந்திரா, ஒரிஷா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டது,

    மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் இன்று (ஜூன் 2) வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வழக்கமாக 8 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு காலை 6 மணிக்கே தொடங்கியது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 மக்களவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் உள்ள 32 மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலின்போது சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்தது.

    அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 2019 தேர்தலில் 82.17 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இந்த தேர்தலில் 82.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இங்கு மொத்தம் உள்ள 60 இல் 10 தொகுதிகளில் ஆளும் கட்சியான பாஜக போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளது.

    அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பேமா கந்து, துணை முதலமைச்சர் சவ்னா மெய்ன் ஆகியோர் போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளனர். கடந்த 2019 தேர்தலில் 46 தொகுதிகளில் வெற்றி பபெற்று பாஜக ஆட்சியமைத்திருந்தது . மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சராக பிரேம் சிங் தமன் ஆட்சியில் உள்ளார். சிக்கிமில் இந்த தேர்தலில் 79.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×