என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சோனியா காந்தி குடும்பத்தினர் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்- அசோக் கெலாட்
- வாக்குகளை ஈர்க்கும் திறன் சோனியாகாந்தி குடும்பத்திற்கு இல்லை என்று வதந்தி பரப்படுகிறது.
- காங்கிரஸ் உட்கட்சி பூசல் பற்றி விளம்பரப் படுத்தப்படுகின்றன.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக் கெலாட், ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகரில், ரீகர் சமூகத்தினர் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரசில் உட்கட்சி பூசல் பற்றிய பேச்சுக்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன, ஆனால் (எங்களுக்குள்) எந்த சண்டையும் இல்லை, நாங்கள் ஒன்றாக இணைந்து அடுத்த அரசை அமைப்போம். சோனியா காந்தி குடும்ப உறுப்பினர்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும், அவர்களால் வாக்குகளை ஈர்க்க முடியவில்லை என்றும் தற்போது வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இது முட்டாள்தனம்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதுதான் உண்மை. அவர்கள் நாட்டில் எங்கு சென்றாலும் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இடஒதுக்கீட்டை காங்கிரஸ் பாதுகாத்துள்ளது. இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் இடஒதுக்கீட்டை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. இன்றைய பாரதிய ஜனதா கட்சி முன்பு ஜனசங்க வடிவில் இருந்தது. அப்போது அவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்தார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.