search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆகஸ்டில் 3 கோடி மரம் நட இலக்கு நிர்ணயித்துள்ளோம்: அசாம் முதல் மந்திரி
    X

    ஆகஸ்டில் 3 கோடி மரம் நட இலக்கு நிர்ணயித்துள்ளோம்: அசாம் முதல் மந்திரி

    • அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
    • ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 3 கோடி மரக்கன்று நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கவுகாத்தி:

    அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    3 முதல் 4 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இது வனப்பகுதியை 2 சதவீதம் அதிகரிக்க உதவும். இதனால் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் சுற்றுச்சூழலில் நமக்கு சாதகமான தாக்கத்தைக் காண்போம்.

    வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 3 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஒரே நாளில் ஒரு கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1.12 கோடி மரக்கன்றுகளை நட்டு 90 சதவீதம் உயிர் பிழைத்துள்ளது.

    மரம் நடும் பிரசாரத்தை செயல்படுத்த மாநில அரசு ஏற்கனவே ராணுவம், விமானப்படை, பள்ளிகள், கல்லூரிகள், சுயஉதவி குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏஜென்சிகள் மற்றும் மத்தியப் படைகளை இணைத்துள்ளது.

    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காடுகளை அகற்றி மீட்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் காடு வளர்ப்பு இயக்கங்களை அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.

    Next Story
    ×