search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வணிக ரீதியான தாய்ப் பால் விற்பனைக்குத் தடை - FSSAI அதிரடி
    X

    வணிக ரீதியான தாய்ப் பால் விற்பனைக்குத் தடை - FSSAI அதிரடி

    • விதிகளை மீறும் உணவு வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சமூக வலைதளங்கலின் மூலம் தாய்ப்பால் விற்பனையை விளமப்பரப்படுத்தி ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது

    வணிக ரீதியான தாய்ப் பால் விற்பனைக்குத் தடை - FSSAI அதிரடி

    உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI, வணிக ரீதியாக தாய்ப்பால் விற்கப்படுவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக FSSAI வெளியிட்டுள்ள அறிக்கையில், , FSS சட்டம்- 2006 விதிமுறைகளின் படி வணிக ரீதியாக மனித பாலை பதப்படுத்துதல், விற்பனை செயதல் சட்டவிரோதமானதாகும் . எனவே, தாய்ப்பால் மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை வணிகமயமாக்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

    மேலும் விதிகளை மீறும் உணவு வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்ப் பாலை பதப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்த மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது.

    பாலூட்டும் தாய்மார்களிடம் இருந்து தாய்ப் பாலை சேகரித்து லாப நோக்கத்துடன் பால் வங்கிகள் அமைத்து சமூக வலைதளங்கலின் மூலம் தாய்ப்பால் விற்பனையை விளமப்பரப்படுத்தி ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் FSSAI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள பால் வங்கியில் தூய்மையான தாய்ப்பால் இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×