என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரசார் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவார்கள்: பசவராஜ் பொம்மை
- ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரசார் அழைத்து கொண்டிருக்கலாம்.
- எங்கள் கட்சியின் வாக்கு வங்கி எங்களை விட்டு விலகி செல்லாது.
பெங்களூரு :
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக செல்லும் இடங்களில் எங்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரசார் அழைத்து கொண்டிருக்கலாம். ஆனால் எங்கள் கட்சியின் வாக்கு வங்கி எங்களை விட்டு விலகி செல்லாது. பா.ஜனதா மீது ஜெகதீஷ் ஷெட்டர் சில குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
பொதுவாக ஒருவர் கட்சியை விட்டு விலகி செல்லும்போது, இவ்வாறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கட்சி மீது சுமத்துகிறார்கள். அவரது 25 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு கட்சி அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ளது. அவரை ஓரங்கட்ட எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அவர் கட்சியை விட்டு சென்றுள்ளார்.
அதனால் எங்கள் கட்சியை அவர் விமர்சித்துள்ளார். அவர் திரும்பி வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் காங்கிரசில் சேர்ந்துள்ளார். அங்கு முதலில் வரவேற்று பாராட்டுவார்கள். அதன் பிறகு அவமதிப்பார்கள். அவரை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.