search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உலகில் அதிக வாகன நெரிசல் உள்ள நகரங்களின் பட்டியல் - 2வது இடம்பிடித்தது பெங்களூரு
    X

    உலகில் அதிக வாகன நெரிசல் உள்ள நகரங்களின் பட்டியல் - 2வது இடம்பிடித்தது பெங்களூரு

    • உலகில் அதிக வாகன நெரிசல் உள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 2-வது இடம் பிடித்துள்ளது.
    • கடந்த ஆண்டின் அக்டோபர் 15-ம் தேதி மிக அதிக வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, வாகன நெரிசல் மிகுந்த நகரமாக திகழ்கிறது. இந்தியாவில் அதிக வாகன நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. தற்போது சர்வதேச அளவில் அதிக வாகன நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 2-வது இடம் பிடித்துள்ளது.

    டாம் டாம் என்ற தனியார் நிறுவனம் கடந்த 2022-ம் ஆண்டு வாகன நெரில் குறித்து ஆய்வு நடத்தி, உலகில் வாகன நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தான் பெங்களூரு 2-வது இடம் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.

    பெங்களூருவின் மத்திய பகுதியில் 10 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 29 நிமிடங்கள் 10 விநாடிகள் ஆகிறது. வாகன நெரிசல் பட்டியலில் இங்கிலாந்தின் லண்டன் நகரம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 36 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகிறது. டெல்லி நகரம் 34-வது இடத்திலும், மும்பை 47-வது இடத்திலும் உள்ளன.

    கடந்த 2021-ம் ஆண்டு வாகன நெரிசல் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்த பெங்களுரு தற்போது 2-வது இடத்திற்கு முன்னேறியது. கடந்த ஆண்டின் அக்டோபர் மாதம் 15-ம் தேதி மிக அதிக வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 260 மணி நேரம் (10 நாட்கள்) வாகனத்தை ஓட்டுவதிலும், 134 மணி நேரம் வாகன நெரிசலிலும் நேரத்தை கழிக்கிறார்கள் என்பது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

    Next Story
    ×