search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    போக்குவரத்து நெருக்கடியால் மலர்ந்த காதல்- இணையத்தில் வைரலாகும் பதிவு
    X

    போக்குவரத்து நெருக்கடியால் மலர்ந்த காதல்- இணையத்தில் வைரலாகும் பதிவு

    • போக்குவரத்து நெருக்கடியால் சந்தித்துக்கொண்ட இளம்ஜோடி காதலித்து திருமணம் வரை சென்ற ருசிகரமும் பெங்களூருவில் நடந்துள்ளது.
    • 5 ஆண்டுகளை கடந்த நிலையில் காதல் வளர்ந்து திருமணத்தில் முடிந்தது. ஆனால் மேம்பாலம் கட்டும் பணி இன்னும் முடியவில்லை.

    பெங்களூரு:

    தகவல் தொழில்நுட்ப துறையில் முக்கிய இடத்தை பிடிப்பது பெங்களூரு. இங்கு ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. தினமும் அதிகாலை வேளையில் இங்குள்ள நிறுவனங்களுக்கு பணிக்கு வாகனங்களில் செல்வோர் அதிகம். இதுதவிர பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவியர், பிற பணிகளுக்கு செல்வோர் காலை வேளையில் அவசர கதியில் புறப்படுவார்கள். இதனால் பெங்களூரு நகரின் சாலைகள் எப்போதும் பரபரப்புடனே காணப்படும். அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

    இவ்வாறு போக்குவரத்து நெருக்கடியால் சந்தித்துக்கொண்ட இளம்ஜோடி காதலித்து திருமணம் வரை சென்ற ருசிகரமும் பெங்களூருவில் நடந்துள்ளது. போக்குவரத்து நெருக்கடியால் உருவான இந்த ருசிகர காதல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    ரெடிட் என்னும் ஐ.டி. பணியாளர் இதை பகிர்ந்துள்ளார். பெங்களூரு சோனி வேர்ல்ட் சிக்னல் அருகே தனது காதலியை சந்தித்துள்ளார். முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் எஜிபுரா மேம்பால கட்டுமான பணியின்போது போக்குவரத்து நெருக்கடியால் நடந்தே பணிக்கு சென்றனர். அப்போது ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர். இருவரும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மாற்று வழியில் பயணத்தை தொடர்ந்தனர். 5 ஆண்டுகளை கடந்த நிலையில் காதல் வளர்ந்து திருமணத்தில் முடிந்தது. ஆனால் மேம்பாலம் கட்டும் பணி இன்னும் முடியவில்லை என்பதை ரெடிட் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    ட்விட்டரில் இவரது பதிவை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் மற்றும் ரியாக்ட் செய்துள்ளனர். சமூக ஊடக பயனர்கள் இந்த அழகான காதல் கதையைப் பாராட்டியும், பெங்களூருவில் நெரிசலான போக்குவரத்தில் தங்கள் சொந்த மோசமான அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்கள்.

    ஏற்கனவே பெங்களூரு போக்குவரத்து நெருக்கடியை மையமாக வைத்து "சில்க் போர்டு, எ டிராஃபிக் லவ் ஸ்டோரி" என்று அழைக்கப்படும் ஒரு காதல் குறும்படம் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×