என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![சுத்திகரிப்பு எந்திரத்தில் தண்ணீர் குடிக்கும் குரங்கு சுத்திகரிப்பு எந்திரத்தில் தண்ணீர் குடிக்கும் குரங்கு](https://media.maalaimalar.com/h-upload/2024/04/26/2112200-monkey.webp)
சுத்திகரிப்பு எந்திரத்தில் தண்ணீர் குடிக்கும் குரங்கு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- எந்திரத்தில் இருந்து தண்ணீர் குடிப்பதற்காக குரங்கு முயற்சி செய்யும் காட்சிகளும், மற்றொரு குரங்கு சமையல் அறையின் ஜன்னலில் அமர்ந்திருக்கும் காட்சிகளும் உள்ளன.
- பெங்களூரு நகரில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி இருந்த நிலையில் தற்போது பரவி வரும் இந்த வீடியோ பேசுபொருளாகி உள்ளது.
கொளுத்தும் கோடை வெயிலில் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் தாகத்தால் மிகவும் தவிக்கின்றனர். இந்நிலையில் தாகத்தில் இருந்து நிவாரணம் தேடி ஒரு வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்த குரங்கு அங்கிருந்த சுத்திகரிப்பு எந்திரத்தில் இருந்து தண்ணீர் குடிக்க முயற்சிக்கும் வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரை சேர்ந்த அக்ஷத் என்ற பயனரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு வீட்டின் ஜன்னல் திறந்து கிடக்கும் நிலையில், அதன் வழியாக குரங்குகள் வீட்டின் சமையல் அறைக்குள் செல்கின்றன. அதில் ஒரு குரங்கு சமையல் அறையில் உள்ள சுத்திகரிப்பு எந்திரத்தை நோக்கி செல்கிறது. பின்னர் எந்திரத்தில் இருந்து தண்ணீர் குடிப்பதற்காக குரங்கு முயற்சி செய்யும் காட்சிகளும், மற்றொரு குரங்கு சமையல் அறையின் ஜன்னலில் அமர்ந்திருக்கும் காட்சிகளும் உள்ளன.
பெங்களூரு நகரில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி இருந்த நிலையில் தற்போது பரவி வரும் இந்த வீடியோ பேசுபொருளாகி உள்ளது.
Monkeys are thirsty: Attacking society and homes through kitchen windows in search of water.
— Akshat Tak (@akshattak) April 22, 2024
The Bangalore water crisis has hit animals harder than humans.
Let's conserve water to help them, too.@peakbengaluru pic.twitter.com/6gpc9JLVc6