search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல்: மத்திய மந்திரி ஹெச்.டி. குமாரசாமி மீது வழக்குப்பதிவு
    X

    ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல்: மத்திய மந்திரி ஹெச்.டி. குமாரசாமி மீது வழக்குப்பதிவு

    • முறைகேடு தொடர்பான வழக்கை லோக் ஆயுக்தாவின் சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
    • சி.ஐ.டி. தலைவருக்கு மிரட்டல் விடுத்ததாக ஏ.டி.ஜி.பி. அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு,

    கர்நாடக மாநிலத்தின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஹெச்.டி. குமாரசாமிக்கு எதிராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாக பெங்களூரு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் மற்றும் அவர்களுடைய உதவியாளர் சுரேஷ் பாபு ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மிரட்டல் விடுத்ததுடன் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் டி.ஜி.பி. எம். சந்திரசேகர் அளித்த புகார் அடிப்படையில் பெங்களூரு சஞ்சய்நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குமாரசாமி தொடர்பான முறைகேடு வழக்கை விசாரணை நடத்தி வரும் கர்நாடக மாநில லோக்ஆயுக்தாவின் சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவருக்கு மிரட்டல் விடுத்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஸ்ரீ சாய் வெங்கடேஷ்வரா மினரல்ஸ் நிறுவனத்திற்கு சுரங்க குத்தகை சட்டவிரோதமாக வழங்கியதாக குமாரசாமி மீது வழக்கு தொடர ஆளுநரிடம் அனுமதி பெற்ற பிறகு, அதிகாரிக்கு குமாரசாமி தரப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. செப்டம்பர் 28 மற்றும் 29-ந்தேதிகளில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதுடன், மிரட்டலும் விடுத்ததாக சந்திரசேகர் தெரிவித்தள்ளார்.

    Next Story
    ×