என் மலர்
இந்தியா
X
இஸ்லாமிய பெண் வாக்காளர்களை சோதித்த பா.ஜ.க. வேட்பாளர்: மீண்டும் சர்ச்சையில் மாதவி லதா
Byமாலை மலர்13 May 2024 1:05 PM IST
- பாராளுமன்ற தேர்தலில் இன்று 4-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை பா.ஜ.க. வேட்பாளர் சோதனை செய்தார்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் இன்று 4வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை கேட்டு பா.ஜ.க. வேட்பாளர் மாதவி லதா சரிபார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை பர்தாவை தூக்கச் சொல்லி.. முகத்தை காட்டு என மிரட்டியதாக கூறப்படுகிறது.
அவர்களை மிரட்டி முகத்தைப் பார்த்த பின்னரே வாக்களிக்க மாதவி லதா அனுமதித்தார். இதை போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்துள்ளனர்.
இவர் தேர்தல் பிரசாரத்தின்போது மசூதியைப் பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி சர்ச்சைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X