search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசியலில் பா.ஜ.க.-காங்கிரஸ் ஒன்றுதான்.. பெண் முதல்வர் யாரும் இல்லை..
    X

    அரசியலில் பா.ஜ.க.-காங்கிரஸ் ஒன்றுதான்.. பெண் முதல்வர் யாரும் இல்லை..

    • பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது.
    • மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் அறிவிப்பு.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மிசோரம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

    மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. பதவியை தக்கவைத்துக் கொண்டது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸிடமிருந்து ஆட்சியை தன்வசம் ஆக்கியது பா.ஜ.க. இதன் மூலமாக மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்து, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.


    சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தேவ் சாய் பதவியேற்றுள்ளார். மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் யார் அடுத்த முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் அறிவிக்கப்பட்டார்.

    ராஜஸ்தானில் இரண்டு முறை (2003-08 மற்றும் 2013-18) முதல்வராக பணியாற்றிய வசுந்தரா ராஜே பதவியை கைப்பற்றுவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், முதல் முறை சட்டமன்ற உறுப்பினரான பஜன்லால் சர்மா ராஜஸ்தான் மாநில முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தற்போதைய நிலையில் நாடு முழுக்க பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண் முதல்வர்கள் ஒருவர்கூட இல்லை. மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி மட்டுமே நாட்டின் ஒரே பெண் முதல்வர் ஆவார்.

    முன்னதாக சுஷ்மா சுவராஜ், ஆனந்திபென் படேல், உமா பாரதி, வசுந்தரா ராஜே போன்ற பெண் முதல்வர்கள் பா.ஜ.க.-வில் ஆட்சி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×