search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு ரோஜா பூ, தேசியக் கொடி கொடுத்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நூதன போராட்டம்
    X

    பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு ரோஜா பூ, தேசியக் கொடி கொடுத்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நூதன போராட்டம்

    • ராஜ்நாத் சிங்குக்கு ராகுல் காந்தி ரோஜா பூ மற்றும் தேசியக்கொடியை பரிசளித்தார்.
    • நாட்டை விற்க வேண்டாம் என்றும், கேட்டுக் கொண்டோம்.

    புதுடெல்லி:

    அதானி விவகாரத்தை பாராளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தும் நோக்கில் பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பாக வாசலில் குழுமிய இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தந்த பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு ரோஜா பூ மற்றும் தேசியக்கொடியை பரிசளித்தனர்.

    பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ராகுல் காந்தி ரோஜா பூ மற்றும் தேசியக்கொடியை பரிசளித்தார்.

    காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட் கூறும்போது, 'தேசியக் கொடியை விநியோகித்தோம். நாட்டை விற்க வேண்டாம் என்றும், கேட்டுக் கொண்டோம். ஏழைகளின் குரல் நசுக்கப்படுகிறது. நாட்டை விற்கும் சதிக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம்.' என்றார்.

    Next Story
    ×