search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எல்லாமே கெட்டு போயிருக்கு.. Blinkit பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்
    X

    எல்லாமே கெட்டு போயிருக்கு.. Blinkit பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

    • குடோனில் இருந்த பல பொருட்கள் காலாவதியாகி இருப்பது கண்டறியப்பட்டது.
    • ராகி மாவு மற்றும் துவரம் பருப்பை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதன் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சொமோட்டோவிற்கு சொந்தமான பிளிங்கிட் குடோனில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். குடோனில் இருந்த பல பொருட்கள் காலாவதியாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக தெலுங்கானா மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் கூறுகையில்,

    குடோனில் இருந்த பல பொருட்கள் காலாவதியாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குடோனில் விதிமீறல் நடந்து இருப்பது அதிகாரிகளின் சோதனையில் கண்டறியப்பட்டது.

    ராகி மாவு மற்றும் துவரம் பருப்பை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதன் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    உணவு கையாளுபவர்கள் தலைக்கவசங்கள், கையுறைகள் மற்றும் கவச உடை அணியாமல் இருந்தனர். உணவு கையாளுவோரின் மருத்துவ தகுதிச் சான்றிதழ்கள் கிடைக்கவில்லை.

    உணவு பொருட்களுடன் அழகுசாதனப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ஹோல் ஃபார்ம் பிராண்டின் உற்பத்தியாளர்களில் ஒன்றான கன்குரூன்ஸ் டிரேட் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் உரிமம் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டத்தின்படி இல்லை.

    நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

    Next Story
    ×