என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கலப்புத் திருமணம் செய்த பெண் கான்ஸ்டபிளின் கழுத்தை அறுத்து 'ஆணவக்' கொலை செய்த அண்ணன்
- குடும்பத்தின் எதிர்பை மீறி நாகமணி - ஸ்ரீகாந்த் திருமணம் நடந்துள்ளது.
- பலத்த காயமடைந்த நாகமணி இரத்த வெள்ளத்தில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தெலுங்கானாவில் சாதி மாறி திருமணம் செய்த இளம் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் அண்ணனால் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், இப்ராஹிம்பட்டினம் மண்டலம், ராய்போல் கிராமத்தை நாகமணி. ஹயத்நகர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வரும் நாகமணி, கடந்த 15 நாட்களுக்கு முன்பு, தான் காதலித்து வந்த ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். குடும்பத்தின் எதிர்பை மீறி நாகமணி - ஸ்ரீகாந்த் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் போலீஸ் கூற்றுப்படி, ராயபோலில் இருந்து மன்னேகுடா நோக்கி இன்று காலை ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த நாகமணி மீது கார் ஒன்று வேண்டுமென்றே மோதியுள்ளது.
ஸ்கூட்டரில் இருந்து நிலைதடுமாறி விழுந்த நாகமணியை காரில் இருந்து இறங்கிய அண்ணன் பரமேஷ் கத்தியால் அவரது கழுத்து மற்றும் பிற இடங்களில் அறுத்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த நாகமணி இரத்த வெள்ளத்தில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகமணியின் உடலை கைப்பற்றினர். நாகமணி காதல் திருமணத்தால் கோபமடைந்த அவரது அண்ணன் பரமேஷ் இந்த ஆணவக் கொலையை செய்துள்ளதாக போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.
வழக்குப்பதிவு விசாரணை நடத்திவரும் போலீசார் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய குற்றவாளியைத் தேடி வருகின்றனர். கொலைக்கு சொத்து தகராறு காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் பிடிக்காததால்தான் நாகமணி ஆணவக்கொலை செய்யப்பட்டதாக அவரது கணவர் ஸ்ரீகாந்த்தும் தெரிவித்துள்ளார்.