search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண்களை லட்சாதிபதியாக்க திட்டம் - நிர்மலா சீதாராமன்
    X

    பெண்களை லட்சாதிபதியாக்க திட்டம் - நிர்மலா சீதாராமன்

    • பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
    • வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3 கோடி மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "நாட்டின் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் பாதையை வகுக்கும் வகையில் எங்கள் ஆட்சி உள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் இது. ஐந்து முக்கிய அம்சங்களை கொள்கையாக கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது."

    "பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3 கோடி மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 2-இல் இருந்து 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளது."

    "ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், மேற்கூரை சோலார் மின் தகடுகள் திட்டம், நடுத்தர வயதினருக்கு வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா போன்ற கிழக்கு மாநிலங்களும் பங்களிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது."

    "ரயில்வேக்கு மூன்று பிரதான பொருளாதார வழித்தட திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 40 ஆயிரம் ரயில்வே பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு இணையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. கடந்த பத்து ஆண்டுகால பொருளாதார செயல்பாடு குறித்து வெள்ளை அறிக்கை சமர்பிக்கப்படுகிறது. பட்ஜெட்டில் 12 விதமான முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×