என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஏழு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்- நான்கு இடங்களை கைப்பற்றியது பாஜக
- பீகார்,தெலுங்கானா இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி.
- மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி வேட்பாளர் வெற்றி பெற்றார்.
மகாராஷ்டிரா, பீகார், அரியானா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், தெலுங்கானா உள்பட 6 மாநிலங்களில் காலியாக இருந்த 7 தொகுதிகளுக்கு கடந்த 3-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மகாராஷ்டிராக மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி வேட்பாளர் ருதுஜா லத்கே வெற்றி பெற்றுள்ளார்.
பீகார் மாநிலம் மோகாமா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளர் நீலம் தேவி வெற்றி பெற்றுள்ளார். அந்த மாநிலத்தின் மற்றொரு தொகுதியான கோபால்கஞ்சில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் குசும்தேவி வெற்றி பெற்றுள்ளார். அரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாவ்யா பிஷ்னோய்யும், உத்தரபிரதேசத்தில் கோலாகோகர்நார் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன்கிரியும் அபார வெற்றி பெற்றுள்ளனர்.
இதேபோல் தெலுங்கானா மாநிலம் முனுகோட் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் கட்சி வேட்பாளர் குஷ்குந்த்லா பிரபாகர் ரெட்டி 12 சுற்றுகளின் முடிவில் 82,025 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். ஒடிசா மாநிலம் தாம்நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக மீண்டும் பெற்றி பெற்றுள்ளது.