search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெற்றோர் உடலுறவு கொள்வதை பார்ப்பீர்களா? சர்ச்சை கருத்து யூடியூபர்கள் மீது வழக்குப்பதிவு
    X

    பெற்றோர் உடலுறவு கொள்வதை பார்ப்பீர்களா? சர்ச்சை கருத்து யூடியூபர்கள் மீது வழக்குப்பதிவு

    • யூடியூபரின் கருத்து பெரும் கண்டத்திற்கு உள்ளானது.
    • யூடியூபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு.

    பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா. பீர்பைசெப்ஸ் என்று அறியப்படும் இவர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் India's Got Latent நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம் கோபத்தை ஏற்படுத்தக்கூடிய கேள்வியை கேட்டார். இவரது கேள்வி அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் இருந்தது.

    இதையடுத்து ரன்வீர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இவருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ரன்வீர் அல்லாபாடியாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஹேமந்த் பிஸ்வா, "இன்று கவுகாத்தி காவல் துறையினர் சில யூடியூபர்கள் மற்றும் சமூக வலைதளInfluencers மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன்படி அசிஷ் சஞ்சல்னி, ஜஸ்பிரீத் சிங், அபூர்வா மகிஜா, ரன்வீர் அல்லாபாடியா மற்றும் சமய் ரெய்னா மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    India's Got Latent நிகழ்ச்சியில் ஆபாச மற்றும் தரக்குறைவான விவாதத்தில் ஈடுபட்டதாக இவர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது, என குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்தடுப்பீர்கள் என்று கேட்டார்.

    Next Story
    ×